ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஐயோ அம்மா selfie டோய்!




அவர்: என்ன தான் இருந்தாலும் நடிகர் சிவக்குமார் அப்படி செஞ்சிருக்க கூடாது சார்

இவர்: அவர் அப்படி என்ன செஞ்சார்?

அவர்: என்ன சார் தெரியாதா? எதோ நிகழ்ச்சிக்கு போகும் போது செல்ஃபி (selfie) எடுத்த பையன் கையிலிருந்த போனை கோபத்தில தட்டி விட்டார். 

இவர்: அவருக்கு அது பிடிக்க்காம இருக்கலாம். விடுங்க சார். 

அவர்: மகாபாரதம், ராமாயணம் சொற்பொழிவெல்லாம் செய்றார். தியானம், யோகப்பயிற்சியெல்லாம் செய்றார். அவருக்கு எப்படி கோபம் வரலாம். 

இவர்: நீங்க கூட தினமும் இரண்டு வேளை மூக்கை பிடிச்சி தியானம் பன்ரீங்க. எப்படி சார்?

அவர்: (சுற்று முற்றும் பார்தவாரே) நீங்க வேற சார். வீட்டில சாப்பிடும் முன்னாடி இப்படி கொஞ்ச நேரம் மூக்கை பிடிச்சி உட்கார்ந்தா எப்பேர்பட்ட சமையலுக்கும் உடம்பு தாங்கும்னு எங்கேயோ படிச்சேன். அதை தான் நீங்க பார்த்திருப்பீங்க. 

இவர்: அது சரி, நீங்க கோபப்பட்டு நான் பார்ததில்லையே சார். அது எப்படி?

அவர்: கொபப்பட்டா வெளியில தான் சோறு திங்கனும். வெளியில சாப்பிட்டு வயித்த கெடுத்துகரத்துக்கு வீட்டில சாப்பிட்டு வயித்த கெடுத்துகரது better இல்லையா?

மனித குலத்துக்கே நீங்க ஒரு வழிகாட்டி சார் என்றவாறே இவர் கிளம்பினார். 

சிவக்குமார் தலைமையில் பட்டிமன்றம் நடக்கும் என்றுதான் எதிப்பார்த்தேன். அவரை வச்சு தெருவுக்கு தெரு பட்டிமன்றம் நடக்குமென்று பலரைப்போல் நானும் நினைக்கவில்லை. 

அப்படி என்ன தான் பிரச்சனை செல்ஃபில்? 

சார், எவனாவது போட்டோ எடுக்க தன் போனை இன்னொருத்தர்கிட்ட கொடுத்திருப்பான். அவன் அந்த போனை தூக்கிடு ஓடியிருப்பான். எதுக்கு வம்புன்னு தானே போட்டோ எடுக்க நம்ப மக்கள் ஆரம்பிச்சிருப்பாங்கஎன்று நண்பர் ஒருவர் செல்ஃபிக்கு ஒரு விஞ்ஞான விளக்கம் கொடுத்தார். 

யார் கண்டார், உண்மையாக கூட இருக்கலாம். 

என் நட்பு வட்டாரங்களில் பெண்கள் மத்தியில் இந்த செல்ஃபி மோகம் அதிகம். காலையில் எழுந்தது முதல் இரவு படிக்கும் வரை குறைந்தது இருபது செல்ஃபியாவது முகநூலில் (Facebook) பதிவுசெய்யவேண்டுமென்று பிராத்தனை செய்திருப்பார்கள் போலும். நினறால் செல்ஃபி, உட்கார்ந்தால் செல்ஃபி, பக்கத்து வீட்டு பாட்டியோ அவங்க வீட்ட ஆட்டுக்குட்டியோ யார் கிடைத்தாலும் செல்ஃபி. 

முகத்தை அஷ்டகோனலுடன் உதட்டை குவித்து கையை மேலெழுந்தவாறு....ஏன் இப்படி?




இப்படி tight closeup இல் அதீத makeup உடன் முகத்தை அஷ்டகோனலுடன் வைத்து செல்ஃபி எடுத்தால் யாருக்குத் தான் பயமாயிருக்காது? 

நெருங்கிய தோழி ஒருவர் சார் புது போனில் எடுத்த செல்பி பாருங்க என்று காண்பித்தார். உங்க முகத்தை பார்த்து உங்களுக்கு பழகியிருச்சு மேடம், ஆனா எனக்கு பக்ன்னு இருக்குதே என்றேன். அன்றே முகனூலில் என்னை unfriend செய்துவிட்டார். 

இருபது மெகாபிக்ஸல், இருபத்தைந்து மெகாபிக்ஸல் என செல்ஃபி காமெராக்கள் கொண்ட தொலைப்பேசிகள் வந்துவிட்டன. ஒருவேளை நான் தான் மாறவேண்டுமோ என்னவோ!

நீங்க என்ன நினைக்கரீங்க ப்ரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக