ஞாயிறு, 30 டிசம்பர், 2018

சூப்பர் ஹீரோஸ்

ஒரு குழந்தையிடமோ இக்கால இளைஞர்களிடமோ super hero யாரென்று கேட்டால் Iron Man, Captain America, Black Panther என்றெல்லாம் ஒரு வேளை சொல்வார்கள். வயது ஏற ஏற, கல்யாணம், குழந்தை, வேலை, EB bill, பால் card, வார இறுதி காய்கறி கடை visit என்றெல்லாம் ஆன பிறகு ஒரு வேளை இந்த super heros உண்மையாகவே இருந்து உலகத்தை காப்பாற்றி ஏதாவது நல்லது செய்ய வருவார்களா என ஏங்குவோம்




தப்பே இல்லை சார், நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகள் அப்படி.

உண்மையிலேயே யார் தான் சார் சூப்பர் ஹீரோவில்லன்களை அடித்து நொறுக்கும் ஹீரோக்களாஒரே நாளில் முதல்வராகி  ஊரையே மாற்றும் கதாநாயகர்களாஏதோ ஒரு கவசத்தை மாட்டிக்கொண்டு ஆகாயத்திலிருந்து குதித்து அந்த ஏலியன்களை பந்தாடும் மாமனிதர்களா


I don't think so.


என்னை பொருத்தவரை, வேலை செய்யும் இடத்தில் கஷ்டமோ அவமானமோ சகித்திக்கொண்டு, வரவைவும் செலவையும் முடிந்த வரை சமாளித்து, கடனை உடனை வாங்கி தன் பிள்ளைகளை மேலே கொண்டுவர தனக்கென்று பெரிதாக ambitions எதுவும் வைத்துக்கொள்ளாத மிடில் க்ளாஸ் பெற்றோற்கள் அனைவரும் Super heroes தான். 


கேட்டால், “ஏதோ சார் நம்ம பிள்ளைங்க நல்லா இருந்தா போதும்” என்பார்கள். 


இவர்களும் நம்முடன் தான் வழ்கிறார்கள், தான் ஹீரோக்கள் என்று தெரியாமலே. ஒவ்வொரு நாளும் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் இம்மனிதர்கள் ஏதோ ஒரு பாடத்தை நமக்கு கற்றுக்கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். நமக்குத்தான் லேட்டாகப் புரிகிறது. 



என் அத்தை பாட்டி (தாத்தாவின் தங்கைநான் நான் சிறுவயதில் பார்த்த முதல் ஹீரோயின். 1அல்லது 13 வயதில் பாலவிவாஹம்சில வருடங்களில் கணவனை பறிகொடுத்தபின் தன் 85 வயது வரைஅதாவது கிட்டத்தட்ட 60 வருடங்கள் வாழ்க்கையை யார் தயவின்றி சொந்தக்காலில் நின்று வாழ்ந்துகாட்டி சாதித்த champion.


அப்பளம் விற்றுவிஷேஷங்களில் சமையல் செய்து தன் தேவைகளை கவனித்துக்கொள்வார்தன் அண்ணனிடம் (என் தாத்தாஎனக்குத் தெரிந்து எதுவும் கேட்டதில்லை


அந்த காலத்தில் பெண் பிள்ளைகளை அதிகம் படிக்க வைப்பதில்லைஇருந்தாலும் படிப்பு தராத நம்பிக்கை தான் கற்றிக்கொண்ட சமையல் கலை அவருக்கு தந்ததுசளி காய்ச்சல் என்று படுக்கமாட்டார்அவ்வளவு கடின உழைப்பாளி.  


அத்தை பாட்டிஅப்பளத்திற்கு மாவு இடிச்சு தரட்டுமா?” என்று கேட்டால் போதும், 2 ரூபாய் தருவார்அதை கொண்டு ரப்பர் ball வாங்கி கிரிக்கெட் விளையாடிய அனுபவம் நிறையஅவர் கையால் வெறும் சுட்ட அப்பளமும் வற்றல் குழம்பும் சாப்பிட்டு இந்த ஜென்ம சாபல்யம் ஆனது என நினைத்த நாட்கள் பல. 


Thanks for everything அத்தை பாட்டி. You are a true hero. 


இவர்கள் எதிர்ப்பார்பது recognition அல்ல, just respect. 


By the way, உங்க சூப்பர் ஹீரோ யாரு?

ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஐயோ அம்மா selfie டோய்!




அவர்: என்ன தான் இருந்தாலும் நடிகர் சிவக்குமார் அப்படி செஞ்சிருக்க கூடாது சார்

இவர்: அவர் அப்படி என்ன செஞ்சார்?

அவர்: என்ன சார் தெரியாதா? எதோ நிகழ்ச்சிக்கு போகும் போது செல்ஃபி (selfie) எடுத்த பையன் கையிலிருந்த போனை கோபத்தில தட்டி விட்டார். 

இவர்: அவருக்கு அது பிடிக்க்காம இருக்கலாம். விடுங்க சார். 

அவர்: மகாபாரதம், ராமாயணம் சொற்பொழிவெல்லாம் செய்றார். தியானம், யோகப்பயிற்சியெல்லாம் செய்றார். அவருக்கு எப்படி கோபம் வரலாம். 

இவர்: நீங்க கூட தினமும் இரண்டு வேளை மூக்கை பிடிச்சி தியானம் பன்ரீங்க. எப்படி சார்?

அவர்: (சுற்று முற்றும் பார்தவாரே) நீங்க வேற சார். வீட்டில சாப்பிடும் முன்னாடி இப்படி கொஞ்ச நேரம் மூக்கை பிடிச்சி உட்கார்ந்தா எப்பேர்பட்ட சமையலுக்கும் உடம்பு தாங்கும்னு எங்கேயோ படிச்சேன். அதை தான் நீங்க பார்த்திருப்பீங்க. 

இவர்: அது சரி, நீங்க கோபப்பட்டு நான் பார்ததில்லையே சார். அது எப்படி?

அவர்: கொபப்பட்டா வெளியில தான் சோறு திங்கனும். வெளியில சாப்பிட்டு வயித்த கெடுத்துகரத்துக்கு வீட்டில சாப்பிட்டு வயித்த கெடுத்துகரது better இல்லையா?

மனித குலத்துக்கே நீங்க ஒரு வழிகாட்டி சார் என்றவாறே இவர் கிளம்பினார். 

சிவக்குமார் தலைமையில் பட்டிமன்றம் நடக்கும் என்றுதான் எதிப்பார்த்தேன். அவரை வச்சு தெருவுக்கு தெரு பட்டிமன்றம் நடக்குமென்று பலரைப்போல் நானும் நினைக்கவில்லை. 

அப்படி என்ன தான் பிரச்சனை செல்ஃபில்? 

சார், எவனாவது போட்டோ எடுக்க தன் போனை இன்னொருத்தர்கிட்ட கொடுத்திருப்பான். அவன் அந்த போனை தூக்கிடு ஓடியிருப்பான். எதுக்கு வம்புன்னு தானே போட்டோ எடுக்க நம்ப மக்கள் ஆரம்பிச்சிருப்பாங்கஎன்று நண்பர் ஒருவர் செல்ஃபிக்கு ஒரு விஞ்ஞான விளக்கம் கொடுத்தார். 

யார் கண்டார், உண்மையாக கூட இருக்கலாம். 

என் நட்பு வட்டாரங்களில் பெண்கள் மத்தியில் இந்த செல்ஃபி மோகம் அதிகம். காலையில் எழுந்தது முதல் இரவு படிக்கும் வரை குறைந்தது இருபது செல்ஃபியாவது முகநூலில் (Facebook) பதிவுசெய்யவேண்டுமென்று பிராத்தனை செய்திருப்பார்கள் போலும். நினறால் செல்ஃபி, உட்கார்ந்தால் செல்ஃபி, பக்கத்து வீட்டு பாட்டியோ அவங்க வீட்ட ஆட்டுக்குட்டியோ யார் கிடைத்தாலும் செல்ஃபி. 

முகத்தை அஷ்டகோனலுடன் உதட்டை குவித்து கையை மேலெழுந்தவாறு....ஏன் இப்படி?




இப்படி tight closeup இல் அதீத makeup உடன் முகத்தை அஷ்டகோனலுடன் வைத்து செல்ஃபி எடுத்தால் யாருக்குத் தான் பயமாயிருக்காது? 

நெருங்கிய தோழி ஒருவர் சார் புது போனில் எடுத்த செல்பி பாருங்க என்று காண்பித்தார். உங்க முகத்தை பார்த்து உங்களுக்கு பழகியிருச்சு மேடம், ஆனா எனக்கு பக்ன்னு இருக்குதே என்றேன். அன்றே முகனூலில் என்னை unfriend செய்துவிட்டார். 

இருபது மெகாபிக்ஸல், இருபத்தைந்து மெகாபிக்ஸல் என செல்ஃபி காமெராக்கள் கொண்ட தொலைப்பேசிகள் வந்துவிட்டன. ஒருவேளை நான் தான் மாறவேண்டுமோ என்னவோ!

நீங்க என்ன நினைக்கரீங்க ப்ரோ?

வியாழன், 18 அக்டோபர், 2018

Manager-ஆ இல்லை Damager-ஆ?


தலைப்பை பார்த்தவுடன் flashback rewind ஆகி பழைய சம்பவங்கள் உங்கள் கண் முன்னே தோன்றினால், நண்பா நீயும் என் இனமடா! 



ஆமாம் ப்ரோ, இந்த மேனேஜருங்களை புரிஞ்சுவவே முடியலை, என்றார் நண்பரொருவர். ஒன்னும் பெரிய குழப்பமில்லை பாஸ், மானேஜர்கள் இரண்டு வகைப்படுவர். 

ஒரு பிரிவினர் “இவனுக்கு என்ன செய்யலாம்” என நினைப்பர். இன்னொரு பிரிவினர் “இவனை என்ன செய்யலாம்” என நினைப்பர்.

அவ்வளவு தான் விஷயமே bro. வார்த்தையில் கடுகளவு தான் வித்தியாம், பஞ்சதந்திரம் படத்தில் வரும்சின்ன கல்லு பெத்த லாபம்என்பதைப்போல. 


மேலாளர் (மானேஜர்) என்பது தன் நிறுவனம் தனக்கு கொடுத்திருக்கும் அங்கீகாரம் என நினைப்பவர் தான் இங்கு அதிகம். உண்மையில், அது ஒரு பொறுப்பு. ஒரு நிறுவனம் ஒரு ஊழியருக்கு அங்கீகாரம் தர நினைத்தால் அது ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை (bonus), அந்நிறுவனத்தின் பங்குகள் பொன்றவைகளை தரமுடியும். 


நான் முன்பு வேலை நிறுவனத்தில் தனக்கு பிடித்த ஊழியரை மெலாளராக நியமிப்பது மிக சகஜம். மாற்றாக, சில சர்வதேச நிறுவனங்களை ஓப்புநோக்கும்போது அவர்கள் ஒரு மேலாளரை பல கட்டங்களுக்கு பின் தேர்வு செய்வர். தான் சார்ந்த வேலையில் உள்ள அறிவு, சக ஊழியர்காலிடம் அணுகும் முறை, முக்கியமாக is he a manager material என்ற கேள்வுக்கான பதில் இதில் அடங்கும். தேர்வு செய்த நபரை அதற்க்குண்டான பயிற்சிக்கு அனுப்புவர். இதன் பின்னரே அவர் ஒரு அணியின் மேலாளராக அமர்த்தப்படுவார். 


Why should an organization emphasis on appointing a good manager? பதில் ரொம்ப சுலபம் சார். இங்க வேலையை பிடிக்காம வேறு நிறுவனங்களுக்கு போனவங்கள விட தன் மேலாளரை பிடிக்காம போனவங்க தான் அதிகம். 


ஒரு ஊழியர் என்ன தான் விரும்புகிறார்? Does my manager lead by example? Does he show interest in my career growth? அவரிடம் நாம் கற்க வேண்டியது என்ன? என் அறிவை மேம்படுத்த (hard skill or soft skill) என்னை பயிற்சிக்கு அனுப்புவாரா, தன் அணியை எவ்வாறு அரவணைத்து செல்கிறார் போன்றவகளை செல்லலாம். 


மாறாக நான் பார்த்தது என்னவோ வேறு மாதிரி. காலை வந்தவுடன் ஒரு காப்பி, பின் தன் அணிக்கோ வேறு அணிக்கோ ஒரு interview, மதியம் போல சாப்பாடு, அதன் பின் இன்னொரு காப்பி, மாலை எதாவது meeting, வாரம் ஒரு முறை தன் அணியிடம் status update meeting. மாலை 6 மணியளவில் ok guys, finish your tasks, see you tomorrow. 


இதெல்லாம் கூட ஓகே ப்ரோ, வருஷம் முடிவில “I think you are performing as expected. I’ll rate you 3 out of 5” -ன்னு நமக்கு rating கொடுப்பாங்க பாருங்க,  இவிங்கள என்ன பன்னலாம் ப்ரோ என்று கேட்டார் நண்பரொருவர். 


என்னவோ பாஸ், சொல்லனும்ன்னு தோனிச்சு. நீங்க என்ன நினைக்கறீங்க?

வியாழன், 11 அக்டோபர், 2018

ஷேர் செய்யுங்க பாஸ், ஷேர் செய்யுங்க


முதலில் இரு சின்ன game விளையாடுவோமா? “நீங்கள் வாட்சப்பிலோ, முகநூலிலோ (Facebook) வரும் முக்கால்வாசி தகவல்களை ஷேர் செய்யும் அசாமியா? Congrats bro, உங்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின்  ட்ரூடோ கனடா குடியுரிமை தருவாரஎன முகநூலில் பதிவு செய்யுங்கள். எவ்வளவு லைக்குகள் மற்றும் ஷேர்கள் விழுகிறது என்று நீங்களே வியந்துபோவீர்கள். 

என்ன செய்ய பாஸ், நம்மாளுக டிசைன் அப்படி என்றார் நண்பரொருவர். முகநூலும் டிவிட்டரும் நாம் பயன்படுத்துவது போய், அவை நம்மை பயன்படுத்தும் காலமிது. 



சில நாட்களுக்கு முன் ஒரு பதிவை காண நேர்ந்தது. இதற்கு ஐம்பத்திமூவாயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர். இம்மாதிரி கப்பலுடன் இணைந்த விமானத்தை இன்னும் Avengers படத்தில் கூட காட்டலயே பாஸ் என்றேன் நண்பர்களிடம். தமிழின துரோகி என்று நீங்கள் முத்திரை குத்தப்படலாம் என்றார்கள் அவர்கள். நமக்கேன் சார் வம்பு!


டேய் உங்க அலப்பரைக்கு எல்லையே எல்லையே இல்லையாடா...அந்த மனிஷன் எனக்கு தெரிஞ்சு ஒரே முறை பொங்கல் வெச்சார். அதுக்கப்பறம் அவரை வெச்சு நம்மாளுங்க தினம் தினம் தீபாவளி கொண்டாடரீங்களே. என்னதாண்டா பிரச்சனை உங்களூக்கு?எனறு தான் கேட்கத் தோன்றுகிறது. 


என்னமோ போங்க பாஸ், அந்தாள வச்சு செய்ராங்க….வச்சு வச்சு செய்ராங்க. 


2015ல் டில்லி ரயிலில் குடிபொதையில் தடுமாறி விழுந்ததாக சலீம் என்பவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படார். எட்டாயிரம் ரூபாய்க்கு ஒரு சைனா ஃபோனும் 150 ரூபாய்க்கு படமெடுத்த data plan-னும் இருந்தால் போதும், எதை வேண்டுமானாலும் படமெடுத்தெடுத்து இணையத்தில் உலாவ விடலாம் என்று நினைப்பவர் முன் அந்த சலீம் மயங்கி விழுந்ததுதான் அவர் செய்த பிழை. ஊடகங்களூம் அவரை தன் பங்கிற்க்கு வறுத்தெடுக்க, நமது key board warriors மட்டும் அவரை சும்மா விடுவார்களா? சில மாதங்களுக்கு பின் அவர் பக்கவாதத்தில் தான் வீழ்ந்தார் என வந்த செய்தி என்னவோ யார் கண்ணில் படவில்லை.




எதை பகிற்கிறோம், எதற்காக பகிற்கிறோம் எனத் தெரியாமல் சமூக வளைத்தளங்களை பயன்படுத்துவோர் ஏராளம் தற்சமயம். தன் கருத்துக்களை பதியும் போதோ, மற்றொருவரின் படிவுகளை பகிறும்போதோ அதில் எத்தனை உண்மை என ஆராயாமல் போகிற போக்கில், just like that, பதிவு செய்வது ஏனென்று தெரியவில்லை.


இப்பவே எது உண்மை எது பொய் என விளங்கவில்லை, பிற்காலத்தில் எப்படியோ!


தனக்கு வந்த செய்திகளை அப்படியே ஷேர் செய்வது, selfie எடுத்து தள்ளி மற்றவர்களை பயமுறுத்துவது, காலையில் ஒரு good morning மாலையில் good night, இதை தாண்டி செல்போனின் reach எவ்வளவு என்று தெரியவில்லை. Artificial Intelligence is the future என்கிறார்கள். என்னகென்னவோ முதலில் natural stupidity-யை நோக்கி இன்னமும் செல்கிறோமோ என தோன்றுகிறது.


வாழிய செல்போன், வாழிய Facebook, வாழிய வாழிய forwards.


என்னவோ பாஸ், சொல்லனும்ன்னு தோனிச்சு. நீங்க என்ன நினைக்கிறீங்க?

திங்கள், 8 அக்டோபர், 2018

எல்லாம் எமக்குத் தெரியும்


முதலில் ஒரு சின்ன disclaimer. இந்த பதிவு மனவியல் பற்றியதல்ல. நமக்கு தெரிந்த ஒரேவியல்இந்த அடை அவியல் தான் பாஸ். “அப்போ என்ன தான் சொல்லவரீங்கஎன்று நீங்கள் கேட்பது சப்தமாகவே காதில் விழுகிறது. நடைமுறை வாழ்கையில் நான்/நீங்கள் சந்தித்த அனுபவங்கள், அல்லது எண்ணகுவியல்கள் மட்டுமே இதில் அடங்கும். 


அக்காலத்தில வரும் நகைச்சுவை காட்சிகள், முதல் முறை நிறைய சிரிக்க வைக்கும், பின் நிறைய சிந்திக்க வைக்கும். அறிவாளி திரைப்படத்தில் வரும் காட்சி சில தினங்களுக்கு முன் பார்க்க நேர்ந்தது. 







இதில் வரும் நடிகையை (முத்துலட்சுமி) போல பலபேரைப் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை எனக்கு வந்தது. இந்த “I know it all” என்ற மனப்பான்மை தன்னை பற்றவர்களிடமிருந்து எவ்வளவு தூரம் விலக்கி வைக்கும் என்ற எண்ணம் சிலரிடம் இல்லாமல் போனது ஏனென்று விளங்கவில்லை. தான் ஒரு genius என்று காட்டிக்கொண்டால் எதோ ஒரு தேசத்திற்க்கு அவர்களை பட்டாபிஷேகம் செய்வார்களோ என்னவோ. 



சகஊழியர் ஒருவர் தான் ஒரு நடமாடும் Wikipedia பாதி Google பாதி கலந்து செய்த கலவை நான் என்று பாடாத குறை தான். மனிதர் எதை கேட்டாலும் அரை நொடியில் பதில் சொல்வார். அந்த மண்டையில் இவ்வளவு சரக்கா என்று கேட்டால், இவ்வாறு விளக்கலாம். மத்திய அரசிடம்தமிழ்நாட்டை விட்டுடுங்க, இவர் தலையை வேண்டுமென்றால் drill செஞ்சு பாருங்க, நியுட்ரீனோ ஹைட்ரோகார்பன் எல்லாம் கிடைக்கும்என்று எழுதிப்போடலாம். 

சில நாட்கள் முன்பு வேறு ஒருவரை சந்திக்க நேர்ந்தது. இவரும் சிங்கப்பூரில் வேலை செய்பவர். பேச்சுவாக்கில்,

நான்: “சார் நீங்க எந்த ஊரிலிருந்து வரீங்க?”

அவர்: “டில்லியிலிருந்து

நான்: “ஒஹோ. என் அக்கா கூட குருகிராம் நகர்ல தான் இருக்காங்க” - குருகிராம் டில்லிக்கு மிக அருகில் உள்ள ஊர்.

அவர்: “ஊரா அது. ஒரு ரோடு போட கூட தெரியல. நேரா ரோடு போடாம வளைஞ்சு வளைஞ்சு போடராங்க”

நான்: “உங்க பிள்ளைங்க எங்க படிக்கிறாங்க?”

அவர்: “International school-ல. உள்ளூர் பள்ளியில மனிஷன் படிப்பானா சார். இந்த பசங்களுக்கு ஒரு விஷயமும் தெரியாது”

நான்: “கிரிக்கெட் பாத்தீங்களா சார். ஜடேஜா நல்லா விளையாடினார் இன்னைக்கு”

அவர்: “மனிஷனா சார் அவன். ஒரு பந்து கூட விளையாட தெரியல”. விட்டால் அவரை நாடு கடத்துவார் என்று கூட தோன்றியது.


இந்த மனிதருடன் இனி பேசி பயனில்லை என தெரித்து ஓட வேண்டிய சூழ்நிலை. தான் அதிமேதாவி என காட்டிக்கொள்ளும் எண்ணம் மட்டும் இல்லாமல், எதிரில் இருப்பர்வர்களூக்கு எதுவும் தெரியாது என்று நிறுபணம் செய்வது ஒரு வித கருத்து தீவிரவாதம். தான் தோற்று எதிரில் இருப்வர் வெற்றி பெற்றால் என்னாவது என்ற பயம், தான் மெத்த படித்த அறிவாளி அல்லது ஒரு intellectual என்ற தன்னையே நினைத்துக்கொள்ளும் ஒரு தற்பெருமை, நீ சொல்லி என்ன நான் கேட்பது என்ற கர்வம், எல்லாம் கலந்த ஒரு design.


உன்மையிலேயே, ஒரு விஷயத்தை முழுவதும் புரிந்துகொண்டவர் (அப்படி ஒருவர் இருந்தாலும் கூட), தான் சொல்ல வந்த விஷயத்தை மட்டுமே விளக்க முயல்வார். அங்கே மற்றவர்களிடம் தன் கருத்து சரியாக சென்றடைய வேண்டும் என்ற intention இருக்கும்.  தான் பார்த்த, கேட்ட விஷயங்களில் எல்லாம் ஒரு opinion இருக்கவேண்டுமா என்ன? அப்படியே இருந்தாலும் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பது ஒருவரின் மனமுதிர்சியின் அடுத்த நிலை. அது ஒரு கலந்துரையாடலை சகஜ நிலையில் வைக்கும். 


எது எப்படியோ, “அப்படியா சார், நீங்க சொன்னா சரிதான்” என்று சொல்ல பழகிவிட்டேன். அவர் தலையில் இருக்கும் கிரீடம் அவரிடமே இருக்கட்டும்.


என்னவோ பாஸ், சொல்லனும்ன்னு தோனிச்சு. நீங்க என்ன நினைக்கிறீங்க?