வியாழன், 6 ஆகஸ்ட், 2020

கொஞ்சம் சிரிங்க பாஸ்…வீட்டுக்கு வீடு மெகாசீரியல்

நேற்று பார்த்த படத்தில் எங்க கதை இருந்ததுன்னு சோபாவில் மல்லாக்க படுத்து யோசனை செய்ய ஆரம்பிக்கும் போதே என் நெருங்கிய நண்பன் ராமசந்திரனோட வீட்டம்மா பானுமதியோட ஃபோன் “அண்ணே! வந்து என் வீட்டுகாரரை பாருங்க. காலைலேந்து எதேதோ உளரிகிட்டு இருக்கார்”.


“ஏங்க அவரு உங்க ஃப்ரண்டு தானே?” - இது என் வீட்டம்மா.


“கரெக்ட் மா.. எவனாவது உளரிகிட்டு இருந்தான்னா கண்டிப்பா அவன் என் ஃப்ரண்டா தான் இருப்பான். போய் பாத்துட்டு வரேன்”.


“டேய் ராமசந்திரா.. என்னடா ஆச்சு?”


“டேய், நான் நேந்து எமதர்ம ராஜாவை பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டே, பாக்க நம்ம பால்காரன் ரங்கசாமி மாதிரி இருந்தாரு”.


எனக்கு “பக்”கென்று தூக்கி வாரிபோட்டது. அப்பறம் கொஞ்சம் நிதானித்துகொண்டு,


“அது நம்ம பால்காரன் ரங்கசாமி மாதிரி இல்லை, ரங்கசாமியே தான். நேத்து மாட்டை கொண்டுபோயிருக்கான், அவனை பார்த்து நீ பயந்து போய்ட்டே”


அது கூட பரவாயில்லை, அவன் கூட்டிகிட்டு போனது பசுமாட்டை. இவன் கண்ணுக்கு அது எறுமை மாடா தெரிஞ்சிருக்கு. It’s a medical miracle. 


“அப்போ இது மனபிரந்தியா தான் இருக்கும்”. “டேய் எனக்கு split personality இருக்குன்னு நின்னைக்கிறேன்”.


“உனக்கு ஒரு personality கூட இல்லையே. இந்த லட்சனத்துல split personality கேக்குதோ. ஒழுங்கா சாப்ட்டு தூங்கு”. 


நாலு மாசமா பூட்டி வெச்சு மெகாசீரியாலா பார்க்க வைச்சா அவனும் என்னதான் பன்னுவான்.


பானுமதியிடம் கொஞ்ச நாள் கேபிள் டீவியை நிறுத்தச் சொல்லிவிட்டு வந்த்தேன். 



கொரோனா வந்தாலும் வந்தது, அவனவன் வீட்டைவிட்டு போகமுடியாத மாதிரி ஒரு சூழ்நிலை. இந்த மெகாசீரியலை பார்த்து பார்த்து இன்னும் பைத்தியமானது தான் மிச்சம்.


இந்த மெகாசீரியல்களில் உருப்படியான விஷயம் எதாவது இருக்கா? ஒரு வருஷம் முன்னாடி பார்த்த ஒரு எப்பிசோடும் இப்போ ஒளிபரப்பும் எப்பிசோடும் அனேகமாக ஒரே மாதிரி இருக்கும். 


“கொரோனாவினால் புது எப்பிசோடுகள் படப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் பழைய எப்பிசோடுகள் மறுஒளிபரப்பு செய்யப்படும்”ன்னு அறிவிப்பு வேற.


அடேய், மனசாட்சியை மொத்தமா எந்த சேட்டு கடையில அடகுவச்சீங்க, சொல்லுங்கடான்னு சட்டையை புடிச்சு கேட்கனும்னுதான் தோனுது.


என் பாட்டி கிட்டத்தட்ட நாலு மெகாசீரியல் பார்த்தபின், அந்த கடைசி சீரியல் கதை என்னன்னு கேட்டால், ஒரு புது கதையை சொல்வார்.


ஒரு நாள் சீக்கிரமாக தூங்கிவிட்டார். எட்டரை மணி இருக்கும். திடீரென்று அலாரம் அடித்தது போல் எழுந்து “டேய், குடும்பம் போறது டா.. குடும்பம் போறது” என்று அழாத குறை.


“என்ன பாட்டி, எந்த குடும்பத்துக்கு என்ன ஆச்சு” என்று கேட்டபின் தான் தெரிந்தது, அது “குடும்பம்” என்ற  மெகாசீரியலாம். 


ஆங், என் ஃப்ரண்ட் ராமசந்திரனுக்கு என்ன ஆச்சுன்னு கேட்கலியே. கொஞ்ச நாள் முன்னாடி அவன் வீட்டுக்கு போனபோது ஏதோ அழும் குரல் கேட்டது. “ஏண்டா இப்ப அழர”ன்னு கேட்டா “டேய், இது உனக்கு நான் அழரா மாதிரி கேட்குதா! சங்கீதம் டா. இது சங்கீதம். நான் பாடினது தோடி ராகம். தெரிஞ்சுக்கோ”. என்றான்.


ஆண்டவா, ஒன்னு இவனை ஊமையாக்கு, இல்ல என்னைய செவுடாக்கு. முடியலப்பா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக