வியாழன், 6 ஆகஸ்ட், 2020

கொஞ்சம் சிரிங்க பாஸ்…வீட்டுக்கு வீடு மெகாசீரியல்

நேற்று பார்த்த படத்தில் எங்க கதை இருந்ததுன்னு சோபாவில் மல்லாக்க படுத்து யோசனை செய்ய ஆரம்பிக்கும் போதே என் நெருங்கிய நண்பன் ராமசந்திரனோட வீட்டம்மா பானுமதியோட ஃபோன் “அண்ணே! வந்து என் வீட்டுகாரரை பாருங்க. காலைலேந்து எதேதோ உளரிகிட்டு இருக்கார்”.


“ஏங்க அவரு உங்க ஃப்ரண்டு தானே?” - இது என் வீட்டம்மா.


“கரெக்ட் மா.. எவனாவது உளரிகிட்டு இருந்தான்னா கண்டிப்பா அவன் என் ஃப்ரண்டா தான் இருப்பான். போய் பாத்துட்டு வரேன்”.


“டேய் ராமசந்திரா.. என்னடா ஆச்சு?”


“டேய், நான் நேந்து எமதர்ம ராஜாவை பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டே, பாக்க நம்ம பால்காரன் ரங்கசாமி மாதிரி இருந்தாரு”.


எனக்கு “பக்”கென்று தூக்கி வாரிபோட்டது. அப்பறம் கொஞ்சம் நிதானித்துகொண்டு,


“அது நம்ம பால்காரன் ரங்கசாமி மாதிரி இல்லை, ரங்கசாமியே தான். நேத்து மாட்டை கொண்டுபோயிருக்கான், அவனை பார்த்து நீ பயந்து போய்ட்டே”


அது கூட பரவாயில்லை, அவன் கூட்டிகிட்டு போனது பசுமாட்டை. இவன் கண்ணுக்கு அது எறுமை மாடா தெரிஞ்சிருக்கு. It’s a medical miracle. 


“அப்போ இது மனபிரந்தியா தான் இருக்கும்”. “டேய் எனக்கு split personality இருக்குன்னு நின்னைக்கிறேன்”.


“உனக்கு ஒரு personality கூட இல்லையே. இந்த லட்சனத்துல split personality கேக்குதோ. ஒழுங்கா சாப்ட்டு தூங்கு”. 


நாலு மாசமா பூட்டி வெச்சு மெகாசீரியாலா பார்க்க வைச்சா அவனும் என்னதான் பன்னுவான்.


பானுமதியிடம் கொஞ்ச நாள் கேபிள் டீவியை நிறுத்தச் சொல்லிவிட்டு வந்த்தேன். 



கொரோனா வந்தாலும் வந்தது, அவனவன் வீட்டைவிட்டு போகமுடியாத மாதிரி ஒரு சூழ்நிலை. இந்த மெகாசீரியலை பார்த்து பார்த்து இன்னும் பைத்தியமானது தான் மிச்சம்.


இந்த மெகாசீரியல்களில் உருப்படியான விஷயம் எதாவது இருக்கா? ஒரு வருஷம் முன்னாடி பார்த்த ஒரு எப்பிசோடும் இப்போ ஒளிபரப்பும் எப்பிசோடும் அனேகமாக ஒரே மாதிரி இருக்கும். 


“கொரோனாவினால் புது எப்பிசோடுகள் படப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் பழைய எப்பிசோடுகள் மறுஒளிபரப்பு செய்யப்படும்”ன்னு அறிவிப்பு வேற.


அடேய், மனசாட்சியை மொத்தமா எந்த சேட்டு கடையில அடகுவச்சீங்க, சொல்லுங்கடான்னு சட்டையை புடிச்சு கேட்கனும்னுதான் தோனுது.


என் பாட்டி கிட்டத்தட்ட நாலு மெகாசீரியல் பார்த்தபின், அந்த கடைசி சீரியல் கதை என்னன்னு கேட்டால், ஒரு புது கதையை சொல்வார்.


ஒரு நாள் சீக்கிரமாக தூங்கிவிட்டார். எட்டரை மணி இருக்கும். திடீரென்று அலாரம் அடித்தது போல் எழுந்து “டேய், குடும்பம் போறது டா.. குடும்பம் போறது” என்று அழாத குறை.


“என்ன பாட்டி, எந்த குடும்பத்துக்கு என்ன ஆச்சு” என்று கேட்டபின் தான் தெரிந்தது, அது “குடும்பம்” என்ற  மெகாசீரியலாம். 


ஆங், என் ஃப்ரண்ட் ராமசந்திரனுக்கு என்ன ஆச்சுன்னு கேட்கலியே. கொஞ்ச நாள் முன்னாடி அவன் வீட்டுக்கு போனபோது ஏதோ அழும் குரல் கேட்டது. “ஏண்டா இப்ப அழர”ன்னு கேட்டா “டேய், இது உனக்கு நான் அழரா மாதிரி கேட்குதா! சங்கீதம் டா. இது சங்கீதம். நான் பாடினது தோடி ராகம். தெரிஞ்சுக்கோ”. என்றான்.


ஆண்டவா, ஒன்னு இவனை ஊமையாக்கு, இல்ல என்னைய செவுடாக்கு. முடியலப்பா.

சனி, 20 ஜூன், 2020

மனம் எனும் மருந்து

சமீபத்திய செய்திகளை நீங்கள் வாசித்திருந்தால் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை நிகழ்வை அறிந்திருக்ககூடும். 

A brilliant actor par excellence, gone too soon. 

தல தோனியை தான் நடித்த “M.S. Dhoni: The Untold Story” படத்தில் நம் கண் முன்னே காட்டியவர். அச்சு அசலாக தோனியின் mannerism, body language அந்த படத்தில இருக்கும். 

34 வயது, heartthrob, அழகன், sheer brilliance in his field of interests. He ticked every box. 



இவன் யாரென்று தெரியாது, சொந்தமோ நட்போ இல்லை. இருந்தாலும் மனசில் ஊசியை அழுத்தி குத்தியது போல வலி. ஏண்டா இப்படின்னு சட்டையை புடிச்சு கேட்கவேண்டும். 

இதில் பெரிய ஆச்சரியம் கலந்த அசிங்கம் ,பத்திரிக்கைகளும், ஊடகங்களூம், சமூக வலைத்தளங்களில் கருத்து கந்தசாமிகளின் பஞ்சாயத்துகளும்... அப்பப்பா, முடியலடா சாமி.

We become defence experts when there are issues at the borders, we become psychiatrists when we hear such suicidal cases, we become medical experts when we hear news about new virus attacks. 

This is beyond Science!

பத்திரிக்கை துறை வழக்கம் போல தன் திவ்ய மங்கள ஸ்வரூபத்தை காட்டியது. சுஷாந்தின் தற்கொலை படங்களை ஒளிபரப்புவது, அவரின் பிரியமானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்த வரும் போது மைக்கை நீட்டி கருத்து கேட்பது என்று அநாகரீகத்தின் உச்சத்தை தொட்டனர். கருத்து சொல்லும் இடமா அது? சுஷாந்தின் உற்ற தோழி கிருத்தி சனோன் (Kirti Sanon) தனது டிவிட்டர் பக்கத்தில் இவர்களை வெளுத்து வாங்கியது சற்று ஆறுதல் தந்தது.





என்ன இருந்தாலும் இந்த பையன் இப்படி செஞ்சிருக்க கூடாது, பாவம் அவனை பெத்தவங்க மனசு எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்று கேட்பவர்கள் தான் இங்கு ஏராளம். Instagram-இல் 11.1 மில்லியன் followers; டிவிட்டரில் 2 மில்லியன் followers, ஆனாலும் பாவம் சார் பையன் தனிமையில் வாடியிருக்கான் போல என வேறு கோணத்தில் அலசல்.

முதலில் ஒருவரின் வாழ்க்கையை அலச நாம் யார்? அந்த அதிகாரத்தை நமக்கு யார் தந்தது? அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் இருக்கும்; நமக்கு என்ன தெரியும்? பணம் வேண்டாம், அந்தஸ்து வேண்டாம், புகழ் வேண்டாம், குடும்பம் வேண்டாம், இவ்வளவு ஏன் - இந்த பாழாய் போன உலகமே வேண்டாம் என முடிவு செய்து அந்த ஒரு ஷணத்தில் இவ்வளவு பெரிய முடிவு எடுதானென்றால் அவன் மனது என்ன பாடுபட்டிருக்கும்.

அப்போ பொதுவாக தற்கொலை தான் எதுக்குமே தீர்வா?

இந்த கேள்விக்கு போகும் முன் ஒரு சிறிய தகவல். 2018-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி, இந்தியாவில் தற்கொலை எண்ணிக்கை 134,000. ஒப்பு நோக்க, கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை (19 ஜூன் வரையில்) கிட்டத்தட்ட 13,000. 


நாம் எதிர்கொள்ள வேண்டிய உண்மையான ஆபத்து என்ன?

இக்கால குழந்தைகளிடம் பாஸிடிவான விஷயங்களை கற்றுக்கொடுக்கும் நாம், நெகடிவான விஷயங்களை எவ்வாறு எதிர்கொள்வது என கற்றுக்கொடுக்கிறோமா என தெரியவில்லை. கிரிக்கெட் விளையாட்டை நீங்கள் ரசிப்பவர் என்றால், ஆஸ்திரேலிய வீரர் Glenn Maxwell பற்றி அறிந்திருக்கக்கூடும். 2019-ஆம் ஆண்டு தனக்கு மனநிலை சரியில்லை எனவும் கிரிக்கெட் போட்டிகளில் தற்காலிகமாக ஓய்வு எடுக்கப்போவதாகவும் பகிங்கரமாக அறிவித்தார். அணி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு தந்து அவருக்கு ஊக்கமளித்தது. தற்போது குணமாகி பழைய உற்ச்சாகத்துடன் விளையாடுகிறார்.


உடல் நிலை சரியில்லை என்றால் விடுப்பு எடுப்பது சகஜம். ஆனால் மனசு சரியில்லை என்று யாரும் ஓய்வெடுப்பதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என சிந்திப்பதே காரணம். தோல்வியை சந்திக்க தெரியாமல் தடுமாறுவது, அளவுகடந்த வெற்றி, காதல் தோல்வி, வேலை இடத்தில் அங்கீகாரம் இல்லாமை, என ஆயிரம் விஷயங்களை எதிர்கொள்ள குடும்ப சுழ்நிலை, நட்பு வட்டாரம், அலுவலகத்தில்/பள்ளியில் ஒத்துழைப்பு என அனுகூலமான கட்டமைப்பு அவசியமாகிறது.

"நலம்" என்றால் உடல் மட்டுமல்ல உள்ளமும் சேர்த்து தானே boss?

புதன், 6 மே, 2020

Oh My கொரொனாவே

அன்புள்ள பக்தா,

நீ நேற்று என்னிடம் வேண்டியது புலம்பியது நன்றாகக் கேட்டது. கனவில் வந்து பதில் சொல்வது old style, நானும் மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்ப ஆரம்பித்து நாளாகிவிட்டது.

கொரொனா கிருமியால் ரொம்பவே பாதிக்கபட்டு இருப்பதாகச் சொன்னாய். அத்தனையும் என் செயல் என என் மீதும் பழி சுமத்தினாய். ஒன்றை நீ சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த உலகத்தையும் அதில் வாழும் ஜீவராசிகளையும் படைத்தது நானாக இருந்தாலும், அதை தான் வாழும் இடமாகவே இருக்கவேண்டும் என நினைப்பது மனித இனம் மட்டுமே.

நினைத்துப் பார், நானா மனிதனை கண்டதையும் உண்ணச்சொன்னேன்? அக்கிருமி வாழும் இடம் வேறு. அது வெளவால் வயிற்றில் வாழ படைக்கப்பட்டது. அதை நீ உண்டு பின் என்னை குற்றம் சொல்லி என்ன பயன்? 



உலகம் மாறிவிட்டதாகச் சொன்னாய். ஆமாம், அதுவும் நல்லதுக்கே. காற்று சற்று தூய்மையாயிற்று, கடலும் வானும் தன் பங்கிற்கு தூய்மையானது. இந்த உலகமும் பஞ்ச பூதங்களூம் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொது என்னும் விதியை மனிதன் புரிந்துகொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.

மேலும் உன் வாழ்கையை மெம்படுத்த எத்தனை ஒடியிருப்பாய். உன் கால்களுக்கும் ஓய்வு வேண்டாமா? லட்சாதிபதிகளும் கோடீஸ்வரன்களும் தன் பணத்தை வைத்து என்ன செய்ய முடிந்தது? அடங்கி ஒடுங்கி வீட்டில் ஒரு ஓரமாக அமர்ந்து இயற்கையை மிஞ்சிய சக்தி வேறில்லை என உணரத்தானே முடிந்தது?

Sometimes the bad things that happen in our lives put us direction on the path to the best things that will ever happen to us. 

தொழில் சேதமடைந்தது என அழுதாய். உப்பு விற்க போனால் மழை பெய்யுது, மாவு விற்க போனால் காத்தடிக்குது என்று புலம்புவதை விட்டு விட்டு வாழ்க்கையின் போக்கிற்கு உன்னை தயார் செய்ய கற்றுக்கொள்.

கடைசியாக, இப்படி வாழ்ந்து என்ன செய்ய செத்து ஒழிவதே மேல் என புலம்பினாய். செத்தொழிந்து என்ன செய்யப்போகிறாய், வாழ்ந்து தான் பாரேன்.

ஆம், உலகம் முன்போல் இருக்காது. ஆனால், இதுவும் கடந்து போகும்.

என்றும் உன்னுடன்,
உன் கடவுள்

வியாழன், 9 ஜனவரி, 2020

பஞ்சார விச்சு குஞ்சு நடந்து


இந்த காணொளியை நீங்கள் அனேகமாக பார்த்திருக்கலாம். இல்லையென்றால் தவறாமல் ஒரு முறையேனும் பார்க்கவும்.






சிரித்து சிரித்து வயிறு வலித்தால் சங்கம் பொறுப்பேற்காது. இதை நகைப்புக்குறிய ஒரு விஷயமாக மட்டுமேனோ நினைக்க மனம் வரவில்லை. சற்று உண்ணிப்பாக கவனிக்க முடிந்தால் பல விஷயங்கள் தொன்றும். காணொளியில் அந்த தாயாரோ குழந்தையுடன் மல்லு கட்ட, அந்த குழந்தையோ “உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே” என்ற தோனியில் பதிலளிக்க, கிட்டத்தட்ட ஒரு மினி மூன்றாம் உலகப் போரே நிகழும் அபாயம் தெரிகிறது.



தன் குழந்தை perfect ஆக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அல்லது ஆசை. மற்ற குழந்தைகள் சரியாக பாடத்தையோ பாட்டோ ஏதாகினும் சரியாக பாடம் படிக்கும் போது, நம் குழந்தை தவறாக சொல்லி விட்டால் நம் கெளரவம் என்னாவது என்ற தவிப்பு, இவையனைத்தும் சேர்ந்த ஒரு கலவையாக தான் அந்த தாயார் தெரிகிறார்.

சிங்கப்பூரில் கியாசு (kiasu) என்ற வட்டாரச்சொல் மிகப்பிரபலம். Fear out of losing  எனப்பொருள் கொள்க. பக்கத்து வீட்டு முழந்தை நன்கு படித்து, தன் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் என்னவது என்ற மனநிலை. அந்த குழந்தை டியூஷன் எடுக்குதா, அதே டியூஷனுக்கு அனுப்பு நம்ம பையனை. அந்த குழந்தை நீலக்கலர் நிக்கர் போட்டிருக்கா, இந்தா எடு அந்த நீலக்கலர் நிக்கர்.

நம் வாழ்க்கையை மற்றவர்களின் செயல்கள் அல்லது சாதனைகள் தீர்மானிக்கின்றனவோ என்ற கேள்வி தான் என் முன்னே.

வேறு கோணத்தில் நோக்க, ஒரு வேளை வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்கின்றோமோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

நண்பர் ஒருவர், நட்பு வட்டாரத்தில் மிகப் பிரபலம். இடியே விழுந்தாலும் கவலையில்லமல் வாங்க சார் டீ சாப்பிடலாம் என்பார். தலை முழுக்க வழுக்கை. கேட்டால், விடுங்க சார், நாமளா போட்டா மொட்டை, சாமியே எடுத்துகிட்டா சொட்டை என்பார்.

தினமும் ரசம் சாதம் தான், என்ன சார் சாம்பார் சாதம் பிடிக்காதா என்று கேட்டதற்கு, “சார், என் மனைவிகிட்ட சாம்பார் சாதம் கேட்கறதும் நடிகர் சிவக்குமார் கிட்ட செல்ஃபி கேட்கறதும் ஒன்னு தான். உசிருக்கு உத்திரவாதம் இல்லை. போற உசிரு ரசம் சாதத்திலேயே போகட்டும்” என்பார்.

மனிதருக்கு பெரிய தொப்பை. “சார், ஒரே வயிரு தானேன்னும் செல்லம் கொடுத்துட்டேன். இப்ப பாருங்க தொப்பையா நிக்குது” என்பார்.

எல்லாவற்றிலும் ஒரு positivity, எவர் கூடவும் போட்டியோ ஒப்பீடோ இல்லை. தன் வாழ்க்கையை தம் கையில், என் போட்டி என்னோடு தான் என்ற ஒரு எண்ணம். இது போன்றோறிடம் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு.

எது எப்படியோ, பஞ்சார விட்டு குஞ்சு நடந்தா சரி.