சனி, 24 ஆகஸ்ட், 2019

உப்புமா


உப்புமா




விமானப் பயணம் பொதுவாக சுகமானது. மேகங்களூடே பயனித்து பழைய நினைவுகளை அசை போடுவது ஒரு தனி அனுபவம. ஆனால் ராகவனுக்குத்தான் இருப்பு கொள்ளவில்லை. பக்கத்து சீட்டில் ஒரு பெரியவர், இயற்க்கை, சுற்றுச் சூழல் என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக ராகவனுக்கு தம் அனுபவங்களை வாரி வழங்கிக்கொண்டிருந்தார். அதில் குளிர்சாதனப்பேட்டியைப் பற்றி மட்டும் அரைமணி நேரம் அறிவுரை. “சார், இந்த ஏசி இருக்குதே, உள்ள எவ்வளவு சில்லுன்னு இருக்கு, ஆனா அது வெளியில விடற உஷ்னம் நமக்கு தெரியாதுஎன்றார்.

ராகவன் மனதில ஒரு சின்ன பிராத்தனைஅப்பா வெங்கடாஜலபதி, என்னய இந்த பெரியவர்கிட்டேர்ந்து காப்பாத்து. திருப்பதிக்கு வந்து காணிக்கை போடறேன். முடிஞ்சா இவரையே உண்டியல்ல போடறேன்”.

ராகவனின் ப்ராத்தனை விமானப் பணியாளருக்கு கேட்டதோ என்னவோ “sir here is your breakfast” என்று எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்தார். கனக்கச்சிதமாக ஒரு கரண்டி உப்புமா, ஒரு வடை அடங்கிய சின்ன டப்பா. உப்புமாவை பார்த்ததும் அப்பாவின் ஞாபகம் எட்டிப்பார்த்தது.



Mr. Cool, என்னுடைய ஒரே  shock absorber. வாழ்நாள் முழுவதும் என்னை சிரிக்க வைத்தார். அம்மா இறந்தபின் ஒரு நாள், என்ன அப்பா உங்களுக்கு வருத்தமே இல்லையா என்றவனிடம், “அப்படி இல்லடா தம்பி, அவள் ஷிப்ட் முடிஞ்சிடிருச்சு, கிளம்பிட்டா. என்ன, இப்போ நான் டபுள் ஷிப்ட் வேலை செய்யனும்என்றார். சொன்னபடி டபுள் ஷிப்ட் வேலை செய்தார். ராகவனின் படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தை வரை பார்த்தார். 

ஒரு நாள் காலை உணவுக்கு உப்புமா செய்தவரிடம், “அப்பா, என்னை கேட்டா இந்த உப்புமாவை இந்தியாவை விட்டு நாடு கடத்தனும்என்றான் ராகவன். “என்னடா தம்பி உப்புமாவை பத்தி இப்படி சொல்லிட்டே. வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச ப்ரெட்டிலேயே உப்புமா செஞ்ச வீரப்பரம்பரை டா நாங்கஎன்றார்.

இன்னொறு நாள் திடீரென்று, “டேய் தம்பி, அம்மாவின் அன்பு தோசை மாதிரி, அப்பாவின் அன்பு தோசைக் கல் மாதிரி. தோசையின் சுவையை நீ அறிவாய், தோசை கல்லின் தியாகத்தை நீ அறியமாட்டாய்என்றார் கிட்டத்தட்ட வைரமுத்துவின் குரலில். 

எங்கேப்பா இந்த மாதிரி கடி ஜோக்கேல்லாம் கிடச்சுது?”. 

நம்ம ரிடையர்ட்  ரொளடி facebook- பேஜ்ல வந்ததுடா. என் நண்பர் வீரசேகர் தான் போஸ்ட் பன்னார்”.

வீரசேகர்? பேரே பயங்கரமாக இருக்கு

டேய் தம்பி, நீ ஒன்னுடா, அந்தாள் ஒருநாள் இட்லிக்கு கொஞ்சம் கூட சட்னி கேட்டதுக்கு அவர் வீட்டுகாரம்மா ஒரு அறை குடுத்தாங்க பாரு, அதாள் வாய திறக்க இரண்டு நாள் ஆச்சு”.

ஒரு வேளை நம் அப்பா கூட இந்த பெரியவர் சொன்னது போல ஏசி மாதிரி தானோ? தன்னால் முடியும் மட்டில் குளிர் காற்றை தந்துவிட்டு வெளியில் நமக்கு தெரியாத உஷ்னத்தை கக்கும் மனிதர்”.

“Sir, is everything alright? How may I help you?” என்ற கேட்ட விமான பணியாளரிடம், “Yes, Everything is perfect. Do you mind if you can serve more upma please.” என்றான் தன் கண்களை துடைத்தவாறே.

சனி, 9 பிப்ரவரி, 2019

பெண்



அம்மா, ரொம்ப டயர்டா இருக்கு. கொஞ்சம் தண்ணி கொடுஎன்று சொல்லியபடியே வீட்டினுள் நுழைந்த வந்தனாவை கொஞ்சம் ஆச்சரியமாகவே பார்த்தாள் அவளின் அம்மா சாரதா.

என்னடா வந்தனா, வழக்கமா சனிக்கிழமை இல்லை ஞாயிற்றுகிழமை தான் இங்க வருவ. ஆச்சரியமா புதன்கிழமை வந்திருக்க! வேலைக்கு போகலயா? ரமேஷ் எப்படியிருக்கார்?” சாரதா கேள்விகளை அடுக்க ஆரம்பித்தாள்.

அம்மா, டயர்டா இருக்குன்னு சொன்னேன். தண்ணி கேட்டேன். எதுவுமே கேட்காம நீ உன்பாட்டுக்கு கேள்வி கேட்டா என்ன அர்த்தம்?” 

சரி, கொஞ்சம் இரு, காஃபி கொண்டுவரேன்என்றவாரே சமையறையில் நுழைந்தாள் சாரதா.

வந்தனாவுக்கும் ரமேஷுக்கும் திருமணம் ஆகி ஒன்றறை வருடம் தான் ஆகிறது. இருவரும் தங்கள் பெற்றோருக்கு ஒரே பிள்ளைகள். தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து, ஓய்வுகாலத்துக்கு கொஞ்சம் சேர்த்து வைத்து, வருடம் தவறாமல் வரி கட்டும் typical middle class families.

தான கொண்டுவந்த காஃபியை சோஃபாவில் சாய்ந்து கண்ணை மூடியவாறே உறிஞ்சி குடிக்கும் வந்தனாவை பார்த்து மறுபடியும் தன் கேள்விகளை ஆரம்பித்தாள் சாரதா. “சொல்லுடா, எதாவது பிரச்சனையா?”

ஆமாம்மா, அதை பத்தி சொல்லத்தான் இங்க வந்தேன். I have decided to divorce Ramesh” என்று சர்வசாதாரணமாக சொன்ன வந்தனாவை சுனாமி அலை அடித்த முகத்துடன் முறைக்க ஆரம்பித்தாள் சாரதா.





தெரியும் மா. உங்க தலைமுறை உங்களுக்கு சொல்லி கொடுத்த ஃபார்முலா இது. எந்த பிரச்சனை வந்தாலும் டைவர்ஸ். சின்ன விஷமமோ, பெரிய  விஷயமோ, எதிலும் தெளிவான சிந்தனை கிடையாது. 

நீங்க படிச்ச படிப்பு உங்களூக்கு ஒரு டிகிரி தான் கொடுத்திருக்கு, அறிவை கொடுக்கலை. ஃபேஸ்புக், வாட்ஸ ஆப் எல்லாத்தையும் பார்க்க வேண்டியது, ஏதாவது ஒரு எதிர்பார்புடன் வாழவேண்டியது. அப்பறம் அது சரியில்ல இது சரியில்லன்னு ஏதாவது ஒரு காரணத்துக்காக டைவர்ஸ் பண்ணவேண்டியது.

எங்க காலத்திலன்னு ஆரம்பிச்சு உனக்கு உபதேசம் கொடுக்க விரும்பல. ஆனா உங்க தலைமுறை பசங்களுக்கு பிரச்சனைகளை சந்திக்கவோ எதிர்த்து போராடவோ தைரியம் இல்லை. சொல்லு உன் பிரச்சனை என்ன?”


பார்த்தியாமா, எடுத்தவுடன் உன் பிரச்சனை என்னன்னுதான் கேட்கற, பிரச்சனை என்னன்னு தெரியாமலே.

நீ சொன்னது தப்பில்லமா. நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க. ரமேஷ் வரையில் அதீத சுயநலத்தோட இருக்கார். தன் வாழ்க்கை, தன் சுகம்ன்னு இருக்கிறவருக்கு எதுக்கு குடும்பம் கல்யாணம்? லீவு கிடைச்சா ஃபெரண்ட்ஸோட குடிக்க வேண்டியது. கண்ணு மண்ணு தெரியாம போதையோட வீட்டுக்கு வந்து தூங்க வேண்டியது. 

கல்யாணம்ன்னா என்னம்மா? வாழ்க்கைய பகிர்வது தானே? ரமேஷ் விஷயத்தில அவர்கிட்ட பகிர எதுவும் இல்லம்மா. அவர் கிட்ட நிறைய நாள் பேசினேன். இது தான் நான், இப்படித்தான் இருப்பேன்ங்கிறார். 

இப்பல்லாம் குடிக்கறது சகஜம்ன்னு சொன்னா நான் ஏத்துக்க தயாராயில்லை. 

காலப்போக்கில மாறலாம், இல்ல நீ அவர மாத்தலாம்ன்னு சொன்னாலும் நான் ஏத்துக்க தயாரில்லை.

ஒரு விஷயத்தில் நான் தெளிவா இருக்கேன்மா. கல்யாணம்கிறது ஒரு பந்தம். நல்லதோ கெட்டதோ 
சேர்ந்தே சந்திப்போம்கிற ஒரு agreement. 


கணவரை திருத்த வேண்டிய ஒரு task ன்னு நான் நினைக்கல.

என்னை பொறுத்தவரை ரமேஷ் நீ எனக்கு கொடுத்த partner. Project இல்ல

சாரதாவுக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.